Wednesday, May 7, 2014

போட்டோஷாப்பில் பளிச்சிடும் பற்கள்

4 comments:
 
வணக்கம் நண்பர்களே, நலமா...

Portrait மற்றும் பேஷன் போட்டோகிராபர்கள் தங்கள் மாடல்களை படம்பிடிக்கும்போது சந்திக்கும் பிரச்சனையைப் பற்றிப் பார்ப்போம். அதாவது மாடல் பார்க்க அழகாக நல்ல நிறத்துடன் காணப்படுவார்கள் ஆனால் ஒருசில மாடல்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்,Portrait போட்டோகிராப்பியோ அல்லது Fashion போட்டோகிராப்பியோ படம் பிரின்ட் செய்யும் முன்பாக  இந்த மஞ்சள் நிற பற்களை சரிசெய்வது அவசியமாகும். 

கீழேயுள்ள படத்தில் வாயெல்லாம் பல்லாக வைத்துக்கொண்டு சிரிக்கும் சிறுவனின் பற்கள் மஞ்சள் நிறம் தோய்ந்து காணப்படுகிறது.இதனை எப்படி போடோஷாப்பில் டூத் பேஸ்ட் இல்லாமலேயே பிரஷ் பண்ணலாம்னு பார்ப்போம்.


முதலில் போட்டோஷாபில் படத்தை திறக்கவும்.
இப்போது New Adjustment லேயரில் Hue/Saturation ஐ கிளிக் செய்யவும்.


இனி நான் படத்தில் காட்டியதுபோல “yellow” வண்ணத்தை தேர்ந்தெடுக்கவும் பின்னர் Saturation மதிப்பை வலமிருந்து இடமாக நகர்த்தவும் மஞ்சள் நிறம் நீக்கப்படும் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளவும்.பின்னர் Lightness ஐ இடமிருந்து வலமாக உங்கள் விருப்பத்திற்கு நகர்த்திக்கொள்ளவும்.



சரி இப்போது ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும்,அதாவது New Adjustments லேயரை  தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் adjust செய்யும் மதிப்பானது உங்களின் படம் முழவதையும் பாதிக்கும்,குழப்பமாக உள்ளதா?

உங்களது Adjustmentsகள் பற்களுக்காக என்றாலும் இதனால் பற்களைத்தவிர‌ தவிர படத்திலிருக்கும் பிற இடங்களும் பாதிக்கப்படும் உதாரணமாக Skin Tone,நமக்கு தேவையான Adjustments பற்களுக்குத்தான் எனினும் படத்தில் பிறபகுதிகள் பாதிக்காமலிருக்க Invert மாஸ்கை பயன்படுத்தப்போகிறோம்.
ஆம் லேயர் பேலட்டில் Hue/Saturation  லேயரில் இருக்கும் லேயர் மாஸ்க் ஆனது வெள்ளை நிறத்தில் இருக்கிறது அல்லவா?


இதனை நாம் Invert செய்ய விசைப்பலகையில் D அல்லது X ஐ அழுத்தவும். இது உங்களது Foreground மற்றும் Background  நிறங்களை முறையே கருப்பு&வெள்ளையாக மாற்றும்.

இப்போது லேயர் மாஸ்கை தேர்வுசெய்து கொண்டு விசைப்பலகையில் CTRL+I ஐ (Image>Adjustments>invert) அழுத்தவும்.


இப்போது உங்களது படம் பழையமாதிரியே reset செய்யப்பட்டிருக்கும் அதாவது மஞ்சள் நிற பற்களுடன். இப்போது Foreground நிறமாக‌ வெள்ளை நிறத்தை தேர்வு செய்து பின்னர் Brush ஐ தேர்வுசெய்து பற்களின் மீது மட்டும் பிரஷ் செய்யவும். இப்போது பற்கள் வெள்ளை நிறமாக மாறும்.


அவ்வளவே…..வெண்மையாக்கப்பட்ட பளபளக்கும் பற்களைப் பாருங்கள்


என்ன மக்கா போட்டோஷாப்பிலே பேஸ்டே இல்லாம பிரஷ் பண்ண கத்துக்கிட்டீங்களா???

அன்புடன்,
நித்தி ஆனந்த்

4 comments:

  1. It's a very useful information that you have shared with us...Many Thanks dear.

    ReplyDelete
  2. நல்ல பாடம்.... பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. @ Cheran Foto Park :
    //onnumee puriyala!!!//

    Nanba Photoshop adippadai paadaththai thaangal purinthukondaal intha paadangkal ungallukku elimaiyaaka irukkum :) Nandri

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff